இலங்கை

மீண்டும் வன்னியிலிருந்து மரக்கடத்தல்!


நெல்லு மூட்கைகளுக்குள் மறைத்து கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் கன்ரர் ரக வாகனத்துடன் கையகப் படுத்தப்பட்டுள்ளது.இன்று (31) வன்னியில் இருந்து நெல்லு மூட்டைகளுக்குள் மறைத்து கடத்தப்பட்ட பாலை மறக்குற்றிகளை யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள்; பிடித்துள்ளனர்.  

கொடிகாமம் மந்துவில் பகுதியில் வைத்து இரவு மடக்கிப் பிடித்துள்ளனர்.வாகனத்தினைச் செலுத்திய சாரதி தப்பித்துள்ள நிலையில் கன்ரர் வாகனத்துடன் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகளையும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment