இலங்கை

48 மில்லியன் ரூபாய்களுடன் இருவர் விமான நிலையத்தில் கைது!

48 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயத்தாள்களை, சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்குக் கொண்டுசெல்ல முயன்றி இந்தியப் பிரஜையொருவரும் இலங்கையர் ஒருவருமாக இருவர், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 40 வயதுடைய இந்தியரும் குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய இலங்கையருமே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், இன்று அதிகா​லை 1.55 மணிக்கு, சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவிருந்த யூ.எல் 306 என்ற விமானத்தினூடாகப் பயணிக்கவிருந்த நிலையிலேயே, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 52,950 அமெரிக்க டொலர்கள், 153,250 யூரோ, 264,000 சவூதி ரியால் மற்றும் 18,500 கட்டார் ரியால் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment