Header Ads

test

டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05 இல் மாகாண சபைத் தேர்தல்


மாகாண சபை தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை எந்த முறையின் கீழ் நடத்துவதென்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக, எதிர்வரும் 26ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டும் கட்சித் தலைவர்கள் கூடவுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் ஏற்கனவே முடிவடைந்ததைத் தொடர்ந்து அவை கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி இடம்பெறுகிறது. அத்தோடு, வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் பதவிக்காலம் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், தேர்தலை விரைந்து நடத்துமாறு பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், இன்று இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments