பருத்தித்துறை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் எனும் குற்றசாட்டில் 15 பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ததாகவும் , அவர்களின் படகுகள் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் , கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment