ஈ.பி.எவ் மோசடியில் சிக்கியது உதயன் நாளிதழ் : ஊழியர் பணம் ஏப்பம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு சொந்தமான உதயன் பத்திரிகை நிறுவனத்தில், தொழில் திணைக்கள அதிகாரிகள் அணை்மையில் அதிரடி சோதனையிலேயே பெரும் முறைகேடுகள் கையும்மெய்யுமாக சிக்கியுள்ளன.
இதுவரை காலமும் தொழில் திணைக்கள அதிகாரிகளிற்கு டிமிக்கி விட்டு, ஊழியர் சேமலாப நிதிய பணம் கட்டாமல் இருந்ததும் அம்பலமாகியுள்ளது. அண்மையில் தொழில் திணைக்கள அதிகாரிகள் வழக்கமான சோதனையொன்றை உதயன் அலுவலகத்திலும் மேற்கொண்டனர்.
உதயன் ஊழியர்களின் சம்பளம், சேவைக்காலம் உள்ளடங்கிய முறையான பட்டியல் ஒன்றை கணக்காளர்கள் தயாரித்து வைத்திருந்தாலும், இப்படியான சோதனைகளிற்கென்றே “டம்மி“ பட்டியல் ஒன்றையும் தயாரித்து வைப்பது வழக்கம். இதுவரையான சோதனைகளின்போதும், இந்த டம்மி பட்டியலையே வழங்கி சமாளித்து வந்தனர்.
திடுதிப்பென அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது, கணக்காளர் கனகசபை அதை எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்தில் கடமையிலிருந்த பெண் பணியாளர் ஒருவரிடம், அந்த பட்டியலை (டம்மி) கொடுக்கும்படி கூறியிருக்கிறார். எனினும், அந்த பெண் பணியாளர் இந்த சூட்சுமங்களை புரிந்து கொள்ளாமல், மூல- முறையான பட்டியலை தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
இதை ஆய்வு செய்த அதிகாரிகள் பெரும் மோசடிகளை கண்டறிந்துள்ளனர். கடந்த பல வருடங்களாக பல பணியாளர்களின் ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், அந்த பணம் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக உதயன் நிறுவனத்தின் ஊழியர் தொடர்பான விபரத்தில் திருகுதாளம் நடந்திருப்பதாக தொழில்திணைக்களம் கண்டறிந்துள்ளது.
இதையடுத்து, உதயன் நிறுவன கணக்காளர் கனகசபை தனது பதவியை விட்டு விலகுவதாக உதயன் நிறுவன உரிமையாளர் சரவணபவனிடம் கூறியிருக்கிறார். தற்போதைய நிலையில், உதயன் நிறுவனம் செலுத்த வேண்டிய தண்டப்பணம் பல இலட்சங்கள் என தெரிய வருகிறது.
இதேவேளை குறித்த விடயம் பிற ஊடகங்களுக்குத் தெரிந்துவிடாது பார்த்துக்கொள்ளுமாறும் வெளியே தெரிந்தால் தனது ஊடகத்தின் மதிப்பு மேலும் கெட்டுவிடும் எனவும் தான் ஒரு சில நாட்களில் கணக்குகளை சீர்செய்துவிடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment