Header Ads

test

இந்தியாவிலிருந்து படகில் இலங்கைக்கு வந்த நாய்: இலங்கை அகதிகளின் பாசம்

இந்­தி­யா­வில் தங்­கி­யி­ருந்த இலங்கை அகதிகள் ஐந்து பேர் நேற்று சட்டவிரோதமாக கடல் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பினர். காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்­பில் இவர்களை கடற்­ப­டை­யி­ன­ர் கைது செய்­து, காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்துள்ளனர்.
அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்­தி­னுள் மாத்­தி­ரம் இவ்­வாறு தாய­கம் திரும்­பிய 24பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.
கடந்த மே மாதம் 5ஆம் திகதி 9 பேரும், 16ஆம் திகதி 4 பேரும், கடந்த 29ஆம் திகதி மன்­னார் கடற்­ப­ரப்­பில் வைத்து 6 பேரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர்.
காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்­பில் நேற்­றைய தினம் ஐந்து அகதிகளும், அவர்கள் பயணித்த படகின் மாலு­மி­கள் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.
தொண்­ட­ம­னாற்­றைச் சேர்ந்த தம்­ப­தி­யர் அவர்­க­ளின் 4 வய­துக் குழந்தை, திரு­கோ­ண­ம­லை­யைச் சேர்ந்த பெண், குரு­நா­கல் பகு­தி­யைச் சேர்ந்த ஆண் ஒரு­வர் ஆகிய ஐந்து அகதிகளே கைதா­கி­னர்.
இந்­தி­யா­வி­லி­ருந்து இவர்­களை ஏற்றி வந்த படகு இலங்கை கடல் எல்­லை­யில் பழு­த­டைந்­த­தா­க­வும், அதன் பின்­னர் பரு­தித்­து­றை­யைச் சேர்ந்த மாலு­மி­க­ளின் உத­வி­யு­டன் இலங்­கைக் கடற்­ப­ரப்­புக்­குள் வந்­தா­க­வும், பொலிஸ் விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அவர்­கள் இந்­திய ஏதி­லி­கள் முகா­மில் வளர்த்த செல்­லப் பிரா­ணி­யான நாயைப் பிரிய மன­மில்­லா­மல் அத­னை­யும் கொண்டு வந்­த­னர். நாயும் காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் நிலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

No comments