சரணடைந்தோர் விபரத்தை தரமறுக்கும் படைத் தரப்பு!
இறுதிப்போரில் சரணடைந்த போராளிகளின் விபரங்களை, காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், படை அதிகாரிகளிடம் கோரியதாகவும், ஆனால் முழுமையான விபரங்கள் தங்களிடம் இல்லையென அவர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. |
ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும ஓகஸ்ட் மாதம் அல்லது செப்ரெம்பர் மாதம் நடைபெறலாம் எனவும் அதற்கு முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கரளை வெளியிட அரசாங்கம் முற்படுவதாகவும் அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள், போர்க்குற்ற விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, ஜெனீவா மனித உரிமைச் சபை இரண்டு வருடகால அவகாசம் வழங்கியிருந்து. ஆகவே, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள, ஜெனீவா மனித உரிமைச் சபையின், அமர்வுக்கு முன்னதாக, குறைந்த பட்சம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின், பெயர் விபரங்களை வெளியிட அரசாங்கம் முற்படுவதாகவும் ஆனால் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் படை உயர் அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதாகவும் அந்த அரச உயர் அதிகாரி மேலும் கூறினார். அதேவேளை, அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் அரசியல் தேவைகளுக்காக. இலங்கை அரசு என்ற கட்டமைப்பையும் அதன் முப்படைகளையும், சர்வதேச அரங்கில் காட்டிக் கொடுக்க முடியாதென படை உயர் அதிகாரி ஒருவர், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸிடம் தெரிவித்ததாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது. |
Post a Comment