Video Of Day

Breaking News

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறை மாணவி ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று சடலமாக மீட்கப்பட்டவர் மண்டூர் காக்காச்சிவட்டை  சேர்ந்த  22 வயதுடைய  சங்கராதுரை பானுஜா  என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாணவி கல்லடி நாவற்குடா பிரதேசத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார், அவரது வீட்டின் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர்களும் கொழும்புக்கு சென்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

No comments