Header Ads

test

மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டில் நடக்காது – பைசர் முஸ்தபா

ஆறு மாகாண சபைகளுக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை, என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
‘மாகாணசபைத் தேர்தலை நடத்த முன்னர், எல்லை நிர்ணய அறிக்கை, விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பழைய முறையிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்த நாம் இணங்கியுள்ளதாக ஊடங்களில் வெளியான செய்திகள் தவறு.
நானோ அல்லது, சிறிலங்கா அதிபரோ,  பழைய முறையில் தேர்தலை நடத்த இணங்கவில்லை.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி, புதிய முறையில் தேர்தலை நடத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.
துரிதமாக எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.
ஆனால் அது நடக்கவில்லை. கட்சித் தலைவர்கள் இதுபற்றி முடிவெடுக்கவில்லை.
பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதென்றால் கூட அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments