Header Ads

test

வடமாகாணசபை கொடி: டக்ளஸிற்கும் அலர்ஜி!

வடமாகாணசபையின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கும் கொழும்பின் அனுமதியை பெறுவதையே டக்ளஸ் விரும்புகின்றாராவென கேள்வி எழுந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக மாகாண சபை கொடி அரைக்கம்பத்தில் பறந்தமை தென்னிலங்கையில் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.தற்போது தென்னிலங்கையின் ஒட்டுண்ணியான டக்ளஸிற்கும் அது அலர்ஜியை தந்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று மாகாண சபையில் அரைக்கம்பத்தில் கொடியை ஏற்றி தனக்குள்ள அதிகாரத்தை நிலை நிறுத்திய வட மாகாண முதலமைச்சர், மக்கள் பிரச்சினைகளுக்காக தனக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது என தெரிவிப்பது ஏன் என டக்ளஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுபவர்கள் அரசுக்கு வழிகாட்டியாக இருந்து மக்கள் நலன்சார்ந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர எதிர்ப்புக்காட்டுவதனூடாக எதனையும் சாதிக்க முடியாது.

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவித்தல் வந்த வேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அந்த அதிகாரத்தை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக கடந்தகாலங்களில் வடக்கு மாகாணசபையை நிராகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு அதன் அதிகாரத்தை பெற்றிருந்ததையும் அதன் பின்னர் முதலாவது வடக்கு மகாணசபையின் அமைச்சர்கள் நான்கு பேரை நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு முதலமைச்சரால் பதவிநீக்கம் செய்யப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டி, அதிகாரம் இல்லை என்றும் நிதி இல்லை என்றும் கூறியவர்களால் எப்படி நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட முடிந்தது.

அதிகாரங்களை பெற்றுக்கொண்டபின் அரசை குறைகூறுவதில் மட்டும் கவனமாக இருப்பவர்கள் மக்கள் நலன்சார்ந்து உழைப்பதற்கு ஒருபோதும் தயாராக இருந்ததும் கிடையாது இருக்கப்போவதும் கிடையாது.

கடந்தகாலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் எமது மக்களின் நலன்களுக்காக பல்வேறுபட்ட சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து அவற்றை சிறந்தமுறையில் மக்களிடம் எடுத்துச்சென்று நாம் சாதித்துக் காட்டியுள்ளோம்.

அந்தவகையில் மக்கள் பிரதிநிதிகளே அரசுக்கு உரிய வழியைக்காட்டி மக்களுடைய தேவைகள் உள்ளிட்ட நலன்சார்ந்த விடயங்கள் தொடர்பில் சரியான முறையில் செயற்றிட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
எதிர்ப்புக்காட்டுவதனூடாக எதனையும் சாதிக்கமுடியாது என்பதனையும் கடந்தகால அனுபவங்களூடாக நாம் கற்றுக்கொண்டுள்ளோம். 

கடந்தகாலங்களில் எமது பகுதிகளுக்கு தேவையான சிற்றூழியர்கள் உள்ளிட்ட ஆளணி வெற்றிடங்களை எமது பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளைக்கொண்டே நிவர்த்தி செய்திருந்தோமென டக்ளஸ் விளக்கமளித்துள்ளார்.

தனது ஆயட்காலத்தில் அரசுகளுடன் ஒட்டி உறவாடிய டக்ளஸ் விடுதலைப்புலிகளை காட்டிககொடுத்ததுடன் அதற்கு பலனாக அற்ப சொற்ப சலுகைகளையே பெற்றிருந்தார்.

ஆதனை முன்னிறுத்தி புலிகள் அரசியல் களத்தில் இல்லாத சூழலில் தனது தற்புகழ் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளார். 

No comments