“கோடுகளால் பேசியவன்” நூல் அறிமுக விழா




ஊடகவியலாளர் கேலிச்சித்திர கலைஞர் குறும்பட இயக்குனர் என பல் பரிமாணங்களை தன்னகம் கொண்டிருந்த மறைந்த காட்டூனிஸ்ட் மாதகல் மண்ணின் மைந்தன் அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரங்களை அவணப்படுத்திய “கோடுகளால் பேசியவன்” என்னும் நூல் பிரித்தானியாவில் எதிர்வரும் 9 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தமிழ் தகவல் நடுவம் (TIC) பிரித்தானியாவில் அறிமுகம் செய்யும் இந் நிகழ்வு லண்டன் பல்கலைக் கழகத்தில் (University of Westminster Harrow Campus, Watford Road ,Northwick Park, HA1 3TP ) பி.ப 14.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh MP பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளதுடன் சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த பலர் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் பத்திரிகைத் துறையில் கார்ட்டூனுக்கான தனி முத்திரையை பதித்தது மட்டுமல்லாது அதில் நவீனத்துவத்தை புகுத்தி தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த அஸ்வினின் கேலிச்சித்திரங்கள் அரசியல் முதல் சமூகம் வரை இன்றும் தீர்க்கதரிசனம் பேசுபனவாக உள்ளன.

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment