Header Ads

test

வடமராட்சி கிழக்கு:பேச்சு நடத்த சொன்ன மைத்திரி!

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மீன்பிடித்துறை அமைச்சர், விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவை சந்திப்பின்போது, தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி வட பகுதி கடலில் மீன்பிடியில் ஈடுபடுவது மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துவதுத் தொடர்பிலும் இலங்கை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

மேலும் வட பகுதி கடல் பிரதேசங்களில் தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப்படையினர் அவர்களுக்கு உதவுவதாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே பேச்சுக்களை நடத்த இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். 

No comments