சரணடைந்தவர்களின் விபரம் வெளியிட முடியும் - காணாமல் போனவர்கள் அலுவலக தலைவா்
2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவா்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு தம்மிடம் கேட்டால் அதனை எழுத்துமூலம் வழங்க தாம் தயாராக உள்ளதாக காணாமல் போனவா்கள் அலுவலக தலைவா் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட காணாமல்போனவர்கள் அலுவலகம் 2ஆம் கட்ட செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
இதனை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதுடன், 2009ம் ஆண்டு போரின் இறுதியில் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறும், அதற்கு பின்னர் சாட்சியமளிக்க தாம் தயார் எனவும் கூறியிருக்கின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய மேற்படி கூற்று தொடர்பாக பதிலளிக்கும் போதே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
“காணாமல்போனவர்களுடைய உறவினர்களின் உணர்வுகளை நான் நன்றாக புரிந்து கொள்கிறேன்.
அதேபோல் காணாமல்போனவர்களை கண்டறியலாம். கடந் த காலங்களில் இடம்பெற்ற காணாமல்போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களைபோல் அல்லாது காணாமல்போனவர்கள் அலுவலகம் அமையாது. அதனை மக்கள் நம்பவேண்டும்” - என்றார்.
Post a Comment