Header Ads

test

வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியின் இராணுவத்துக்கு முக்கியத்துவம்


வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு, 48 பேர் கொண்ட சிறப்புச் செயலணி ஒன்றை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இச் செயலணியில் முப்படைகளின் தளபதிகள், மற்றும் இராணுவ, அரச அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலணியில்,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 15 அமைச்சர்கள், இரண்டு மாகாணங்களின் ஆளுனர்கள், இரண்டு மாகாணங்களினதும் முதலமைச்சர்கள், சில அமைச்சுக்களின் செயலர்கள், என 20 பேர் அரசியல் சார்ந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 28 பேரில் முப்படைகளின் தளபதிகள், மற்றும் இராணுவ, அரச அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாக இந்தச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புச் செயலணியின் செயலராக சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, இந்தச் செயலணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

No comments