சிறிலங்காவில் வீசும் காற்றுடன் கூடிய நிலைமை ஜூன் 11 வரை தொடர்ந்து காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜூன் 11இன் பின்னர் இந் நிலைமை படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும். குறிப்பாக வடக்கு, மேல்.தென். மத்திய. வடமத்திய. மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும்அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கில் வீசிவரும் கடும் காற்றினால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதோடு மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment