Header Ads

test

டாண் கேபிள்:தென்னிலங்கை மீனவர்கள்:விசயகலா சீற்றம்!

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறிய கடலட்டை பிடிப்புவிவகாரம் என்றாலும் சரி முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் டாண் தொலைக்காட்சியின் கேபிள் வயர்கள் அறுக்கப்பட்டமை என்றாலும் சரி, ஒருசில அதிகாரிகளின் அசந்தமப்போக்கே அவற்றிக்கு முழுமையாக காரணமாக அமைந்துள்ளதாக அரசின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விசயகலா மகேஸ்வரன் தனது ஞானசூனியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் டாண் தொலைக்காட்சியின் பிரச்சார பீரங்கியாகியிருக்கின்ற விசயகலா இருவரது மரணத்திற்கு காரணமான கேபிள் வயர்களை துண்டித்த மின்சாரசபை அதிகாரிகளை கண்டித்துமுள்ளார்.
இலங்கை காவல்துறையினால் குறித்த விபத்திற்கு காரணமான உள்ளுர் டாண் தொலைக்காட்சி கேபிள் வழங்குநர் கைது செய்யபட்டிருந்தார்.இரு அப்பாவி பொதுமக்களது மரணம் அனைத்து மட்டங்களிலும் சீற்றத்தை தோற்றுவித்திருந்ததுடன் முறையற்றவகையில் மின்கம்பங்களை பயன்படுத்தி டாண் தொலைக்காட்சி மேற்கொண்ட கேபிள் விநியோகங்கள் தொடர்பிலும் கேள்வி எழுந்திருந்தது. 

இதனையடுத்து டாண் இணைப்புக்களை மின்சாரசபை ஊழியர்கள் துண்டித்திருந்த நிலையில் டாண் தொலைக்காட்சியின் முகவராக விசயகலா மின்சக்தி அமைச்சருடன் தொடர்புகொண்டு துண்டிப்புக்களை தடுத்ததாக சொல்லப்படுகின்றது.அத்துடன் கேபிள்களை துண்டித்த அதிகாரிகளிற்கு பொதுநிகழ்வொன்றில் வைத்து மிரட்டலையும் அவர் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மின்சாரசபை தொழிற்சங்கங்களது கவனத்திற்கு சென்றுள்ளதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கைகளிறகு தயாராகிவருகின்றன.  

No comments