இலங்கை

கொக்குவில் வாள்வெட்டு! சந்தேக நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு!

கொக்குவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள்.

முறைப்பாட்டாளர் மற்றும் அவருடன் இணைந்தவர்களே தாக்குதல் நடத்தினர்.
இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று முறைப்பாட்டாளர் எதிர்வரும் 18ஆம் திகதி மன்றில் முன்னிலையாக வேண்டும் என்று அழைப்பாணை உத்தரவு பிறப்பித்தது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment