Header Ads

test

பாவப்பட்ட பணம் வாங்க தவராசா சபைக்கு வரவில்லை - ஓடி ஒளிந்துகொண்டார்


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக் கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றை ய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் இன்றைய (12) அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளாது ஒளித்துக்கொண்டுள்ளார்.

குறித்த நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இன்று வடக்கு மாகாணசபைக்கு வருகைதந்து தவராசாவிடம் பணத்தினைக் கையளிக்கப்போவதாகக் கூறியிருந்தனர். அவ்வறோ பாவப்பட்ட பணம் என எழுதப்பட்ட பையினுள் சில்லறைக் காசுகளுன் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கு மாகாணசபைக்கு வருகைதந்திருந்தனர்.

இந்நிலையிலேயே தவராச சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாது ஒளித்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை தவராசாவின் வங்கிக் கணக்கிற்கும் பாவப்பட்ட பணம் எனக்கூறி இளைஞர்கள் சிலர் ஆகக் குறைந்த வைப்பிலிடும் தொகைகளை வைப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments