ஒரு நாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன்!
பா.டெனீஸ்வரனை அமைச்சு கதிரையிலிருக்க வைத்து முதலமைச்சரிற்கு குடைச்சல் கொடுக்க தமிழரசு தலைகள் ஆலாய் பறக்கத்தொடங்கியுள்ளன.
முன்னாள் இலங்கை பிரதம நீதியரசரான சிரானி பண்டார நாயக்க மஹிந்த ஆட்சியில் பதவி பறிக்கப்பட்டிருந்தார்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒருநாள் மீண்டும் தனது பதவியினை ஏற்று பின்னர் அவர் ஓய்வுபெற்றுக்கொண்டார்.அதேபோன்று பா.டெனீஸ்வரனும் ஒருநாள் அமைச்சராக பொறுப்பேற்று இருந்துவிட்டு ராஜினாமா செய்யலாமென யாழ்ப்பாண நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நாளிதழது ஆசிரியரை தொடர்புகொண்ட வடமாகாண அவைத்தலைவர் ஏன் அவ்வாறு செய்தி வெளியிட்டீர்கள்.அவர் சபையின் ஆயுட்காலம் முடியும் வரை அமைச்சராக இருக்கலாமேயென தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அடுத்து முதலமைச்சராக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பிரேரிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்துகனவு கலைந்து போயிருந்தது.
இந்நிலையில் தற்போது பா.டெனீஸ்வரன் மூலம் மீண்டும் தலையிடி கொடுக்க அவர் தயாராகிவருகின்றார்.
இதனிடையே தமிழரசு ஆலோசனையினையடுத்து இரவிரவாக தனது வீட்டில் குறித்த விடயம் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா அலைந்து திரிந்துள்ளார்.எனினும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் கண்டுகொள்ளாத நிலையில் கட்சி ஆதரவு ஊடகங்கள் முதலமைச்சரினை ராஜினாமா செய்யும் செய்தியை கொண்டு சென்றிருந்தன.
முள்ளிவாய்க்கால் சில்லறை பணத்தின் பின்னர் அரசியலே வேண்டாமென ஒதுங்கியிருக்க முற்பட்ட சி.தவராசா எதிர்கட்சி தலைவர் பதவியின் மூலம் கிடைக்கும் பலாபலனிற்காக தமிழரசுக்கட்சியுடன் ஒட்டியிருக்கவேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment