Header Ads

test

சிறிலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க ஆர்வம்

சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, முன்நோக்கிச் செல்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது என்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படைகள் சேவை குழுவின் தலைவரான மக் தோன்பெரி தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஹென்றி கியூலர், விக்கி ஹாட்ஸ்லெர், ஆகியோருடன் இரண்டு நாட்கள் சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருந்த மக் தோன்பெரி, அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவுகள், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது.

இந்த உறவுகளை, மேலும் ஆழமாக முன்கொண்டு செல்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா மிக முக்கியமான கேந்திரமாகும்.

இந்த மூலோபாய தளமானது, வளமான, நிலையான ஜனநாயகம் என்பனவற்றைக் கொண்டிருப்பது முக்கியமானது.

கடந்த சில ஆண்டுகளில் சிறிலங்கா நீண்ட பாதைகளைக் கடந்து வந்திருக்கிறது.

ஆனால் அவர்கள் முன்நோக்கிச் செல்வதற்கு இன்னும் அதிகமாக- கடுமையாகப் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

இந்த முக்கியமான தருணத்தில், சிறிலங்காவின் முன்னேற்றங்களுக்கு இராணுவ- இராணுவ பரிமாற்றங்களை அதிகரிப்பது,  அபிவிருத்தி உதவி, ஆட்சியியல் திட்டங்கள் என்பனவற்றில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பு முக்கியமானது.” என்றும் அவர் கூறியுள்ளார்

No comments