Header Ads

test

இந்த ஆண்டு இறுதிக்குள், மாகாணசபைத் தேர்தல்


இந்த ஆண்டு இறுதிக்குள், மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதனை உறுதிப்படுத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச, தேர்தல்களைச் சந்திப்பதற்கு ஏற்ற வகையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீளக் கட்டியெழுப்பப்படும் என்று தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு சிறிலங்கா அதிபர், பிரதமர், சபாநாயகர்  மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்தவாரம் கூறியிருந்தார்.

சிறிலங்காவில் மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், மேலும் மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் வரும் செப்ரெம்பர்- ஒக்ரோபர் காலப்பகுதியில் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments