இலங்கை ரூபா வீழ்ச்சி! டொலரின் பெறுமதி அதிகரிப்பு!
இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது இன்று (07) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 160.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.
டொலர் ஒன்றின் விற்பனை விலை அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இம்மாதம் 01 ஆம் திகதி டொலர் ஒன்றின் விலை 159.61 ரூபாவாக காணப்பட்டது.
இவ்வருடத்தின் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 3.65 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment