Header Ads

test

நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தயார்? மைத்திரி

நாடாளுமன்றைக் கலைக்கத் தயார் ஆனால் தற்­போது நாடாளுமன்றத்தை அரச தலை­வ­ரால் கலைக்க முடி­யாது. நாடாளுமன்றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும் பான்மை நாடா­ளு­மன்ற உறுப் பினர்­க­ளின் விருப்­பத்­து­ட­னேயே அத­னைக் கலைக்­க­லாம்.

நாடா­ளு­மன்­றம் இப்­போ­தி­ருக்கின்ற நிலை­யி­லேயே இணைந்து செயற்படு­வதே சரி­யா­ன­தா­கும். உள்­ளக ரீதி­யில் அனைத்­துக் கட்சிகளுக்­கும் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. இது நாட்­டின் எதிர்காலத்தைப் பாதிக்­கும். நாட்டை நேசிக்­கும் அனை­ வ­ரும் அந்த நெருக்­க­டி­களை மறந்து நாட்டுக்­காக இணைந்து செயற்­பட முன்வரவேண்­டும். நாடா­ளு­மன்­றத்­தைக் கலைப்பது என்­றால் பெரும் பாலான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் விருப்­பத்­து­டன் கலைத்து தேர்த­லுக்கு செல்லவேண்­டும்.

இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார். சிங்­கள ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறியுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஊழல்­வா­தி­க­ளும் ஊழல்­வா­தி­களை காப்­பாற்­று­ப­வர்­க­ளும் எனக்கு எதிரா­க­வும், எனது பிள்ளைகளுக்கு எதி­ரா­க­வும் அர­சி­யல் சேறுபூசல்களைச் செய்­கின்­ற­னர். சமூக இணை­ய­த­ளங்­கள், இலத்திரனியல் ஊட­கங்­கள், அச்சு ஊட­கங்­கள் போன்­ற­வற்­றி­னால் எனக்கு எதி­ராக தெரிந்தோ தெரி­யா­மலோ சேறு­பூ­சப்­ப­டு­கின்­றது.

அரசு என்ற ரீதி­யில் நூறு­நாள் வேலைத்­திட்­டத்தை நடைமுறைப்படுத்தியி­ருக்­க­வேண்­டிய அவசியமில்லை. நாடாளுமன்றத்தில் 47 உறுப்­பி­னர்­களை வைத்­துக்­கொண்டு ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­ச­மைப்­புத் திருத்­தம், புகை­யி­லைச் சட்­டம், சுகா­தார கொள்கை போன்ற விட­யங்­க­ளைச் செய்­ய­வேண்­டி­யி­ருந்­தது. அன்று அவை அனைத்­தை­யும் நாங்­கள் சுதந்­தி­ரக்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்பினர்­க­ளின் ஆத­ர­வைப் பெற்றே செய்­தோம்.

இன்று அவற்றை மறந்­து­விட்­ட­னர். நினைவு இருந்­தா­லும் அவ்­வாறு எதுவும் நடக்­க­வில்லை என்ற தோற்­றத்தை காட்ட முயற்­சிக்­கின்­ற­னர்.

நான் சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பொறுப்­பேற்­ற­தால் பிரச்­சி­னை­கள் ஏற்பட்டன எனக் கூற சிலர் முற்படுகின்­ற­னர். நான் சுதந்­தி­ரக் கட்­சியை பொறுப்­பேற்­ற­தன் கார­ண­மா­கவே நூறு­நாள் திட்டத்தின் பல செயற்பாடுகளை முன்­னெ­டுக்க முடிந்­தது.

நூறு நாள் திட்­டம் எனக்­குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை என்று கூற­வில்லை. இதனை யார் செய்­தது என்று எனக்­குத் தெரி­யாது என்றே கூறி­னேன். சில ஊட­கங்­க­ளும் எனது எதி­ரி­க­ளும் இத­னைத் திரி­பு­ப­டுத்தி வெளியிட்­ட­னர். இது எனக்­குத் தெரி­யாது என்று கூறி­ய­தாக செய்தி வெளி­யிட்­ட­னர்.

நூறு­நாள் திட்­டத்தை உரு­வாக்­கி­யது யார் என்று எனக்­குத் தெரி­யாது என்றே நான் கூறி­னேன். நாங்­கள் அத­னைச் செயற்­ப­டுத்­தி­னோம். ஆனால் உண்­மை­யி­லேயே அதனை செயற்படத்தியிருக்கவேண்­டிய அவசி­யம் இல்லை.

நான் அரச தலை­வ­ரா­கி­ய­வு­டன் நாடா­ளு­மன்­றத்தை கலைத்­தி­ருக்க வேண்­டும். அப்­ப­டிச் செய்திருந்தால் இன்­றைய எந்­தப் பிரச்­சி­னை­யும் இருந்­தி­ருக்­காது. புதிய கட்­சி­க­ளும் வந்­தி­ருக்­காது என்­றார்.

‘பிணை­முறி ஆணைக்­குழு நிய­ம­னத்­து­ட­னேயே உங்­க­ளுக்கு எதிரானநெருக்­க­டி­கள் உரு­வா­கின. அப்­படி செய்­தி­ருக்­கா­வி­டின் நீங்­கள் இனி­மை­யான வாழ்க்கை வாழ்ந்­தி­ருக்­க­லாம். இது தொடர்­பில் உங்­கள் கருத்து?’ என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, யார் தனிப்­பட்ட ரீதி­யில் எனக்­குத் துரோ­கம் செய்­தா­லும் அவ­மா­னப்­ப­டுத்­தி­னா­லும் நான் செய்­தது சரி. அது நாட்­டுக்­கா­கச் செய்த விட­யம்.

நீங்­கள் கூறு­வது போன்று இந்த ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கா­தி­ருந்­தால் எனக்கு எந்த நெருக்கடியும் ஏற்­பட்­டி­ருக்­காது. எனக்­கும் எனது குடும்பத்­துக்­கும் பிள்­ளை­க­ளுக்­கும் எந்த அவமான­மும் செய்­தி­ருக்க மாட்­டார்­கள். எப்­ப­டி­யி­ருப்­பி­னும் நாட்­டுக்­காக நான் செய்­ய­வேண்­டி­யதை நான் செய்­தேன். நான் எனக்கு வரு­கின்ற எந்­தப் பிரச்­சி­னை­யை­யும் நாடு என்ற இடத்­தி­லி­ருந்தே பார்ப்­பேன். இந்த ஆணைக்­கு­ழுவை நிய­மித்­தன் ஊடா­கவே என்­னைப்­ப­பற்றி தவ­றான விடயங்களை முன்­வைத்து சிலர் விமர்­சிக்­கின்­ற­னர், என்று பதி­ல­ளித்­தார்.

No comments