துண்டாடப்படுகின்றது டாண் கேபிள்?
யாழ்.குடாநாட்டின் பல இடங்களிலும் உள்ள டாண் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்புக்கள் இன்று காலை முதல் இலங்கை மின்சாரசபையினால் அதிரடியாக அகற்றப்பட்டுவருகின்றது.
டாண் தொலைக்காட்சி தனது போட்டி நிறுவனமான யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தினரை சிக்கவைக்க திட்டமிட்டு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்ற பதிலுக்கு யூ.எஸ்.கேபிள் நிறுவனம் இலங்கை மின்சார சபை மூலம் தொலைக்காட்சி கேபிள்களை அறுத்தெறிய வைத்துள்ளது.
இதனிடையே யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தின் கேபிள்கள் வெட்டி துண்டாடப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
யாழில் கேபிள் இணைப்புகளை வழங்கிவரும் யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தின் கேபிள் இணைப்புக்கள் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யூ.எஸ்.கேபிள் நிறுவனத்தின் இயக்குனர் துசியந்தன் (சூட்டி) என்பவரால் அச்சுவேலி காவல்; நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
யாழில் சட்டவிரோத கேபிள் இணைப்புகளை வழங்கும் நிறுவனங்கள் மீது இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினால் யாழ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில் கேபிள் துண்டிப்பு நடந்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் வடமராட்சி கரணவாய் பகுதியில் டாண் தொலைக்காட்சியின் கேபிள் வழி ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மகனென இருவர் பரிதாபகரமாக உயிரிழந்திருந்தனர்.துண்டித்து வீசப்பட்டிருந்த டாண் தொலைக்காட்சியின் கேபிள் வழி மழையின் போது மின்னொழுக்கு ஏற்பட்டிருந்தமையே மரணத்திற்கு காரணமென சொல்லப்பட்டிருந்தது.
எனினும் டாண் தொலைக்காட்சி பினாமி குகநாதன் ஜனாதிபதியின் பிரத்தியேக இணைப்பாளர் எனும் பெயரை பயன்படுத்தி காவல்துறையிடமிருந்து தப்பித்துமிருந்தனர்.
இந்நிலையினில் குறித்த விவகாரம் மின்சக்தி அமைச்சர் வரை சென்றிருந்த நிலையில் தற்போது மின்கம்பங்கள் ஊடாக முறையற்ற வகையில் இணைக்கப்பட்டிருந்த டாண் தொலைக்காட்சி கேபிள்கள் இன்று முதல் துண்டிக்கப்பட்டுவருகின்றது.
Post a Comment