Header Ads

test

மல்லாகம் துப்பாக்கிச் சூடு - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தலமையிலான குழுவினர் இன்று காலை மல்லாகம் இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மனித உரிமைகள் ஆணைக்குழு மக்களுடன் கலந்துரையாடியுள்ளது. இதன்போது தமக்கு நீதி வேண்டும் என மக்கள் கூறியுள்ளதுடன், தமது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்

தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பார்வையிட்டதுடன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞருடைய உறவினர்களையு ம் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

No comments