மல்லாகத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனுடைய சடலம் இன்று (18) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மல்லாகம் சகாயமாதா ஆலயப்பகுதியில் இடம்பெற்ற குழப்பத்தில் மல்லாகம் பகுதிய சேர்ந்த பா.சுதர்ஷன் உயிரிழந்தார்.
அவரது சடலம் பிரதேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனையின் பின் இன்று மாலை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இளைஞனின் முதுகுப்புறமாக புகுந்த துப்பாக்கி ரவை சுவாசப்பையை சேதப்படுத்தி நெஞ்சு வழியாக வெளியேறியுள்ளது. இதனால் உண்டான அதிக இரத்த போக்கே மரணத்திற்கு காரணம் என மரண விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments :
Post a Comment