Header Ads

test

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்


பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமையானது புலம்பெயர்ந்தோர் அமைப்பினரின் தேவையின் பொருட்டே என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்திருந்தார்.
குறித்த சட்டமூலத்தின் மூலம் மனித உரிமைகள் கடந்த காலத்தில் மீறப்பட்டுள்ளன.
எனவே, மனித உரிமைகளுக்கு சாதகமான முறையில் அரச பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தின் பேச்சாளராகவே இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் செயற்படுகிறாரோ என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தேசப்பட்டுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பலர் விடுவிக்கப்படுவார்கள்.

இது பாரதூரமானது எனவும், பயங்கரவாத சட்டம் சர்வதேசத்திற்கு பொருத்தமற்றது என்றால் அதில் உள்ள சில சரத்துக்களை மறு சீரமைக்க வேண்டும்.

அதுவே பொருத்தமானதாக இருக்கும் எனவும் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்

No comments