Header Ads

test

புறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்!


உள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ளது. இன்றைய தினமான சனிக்கிழமை பருத்தித்துறை,மற்றும் கரவெட்டி பகுதிகளினில் மக்கள் மற்றும் ஆதரவாளர் சந்திப்புக்களை முன்னணி ஆரம்பித்துள்ளது.

வெளிப்படையான அரசியல் விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒழுங்குபடுத்த தாம் திட்டமிட்டுள்ளதாக முன்னணி அறிவித்துள்ளது.

இச்சந்திப்புக்களில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராசா கஜேந்திரன்,வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் பங்கெடுத்துவருகின்றனர்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் பெரும் வெற்றியை முன்னணி சந்தித்திருந்த நிலையில் கூட்டமைப்பு தனது பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்துவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments