Header Ads

test

டிரம்ப் - கிம் சிங்கப்பூர் வந்தனர்! நாளை உலகம் உற்றுநோக்கும் பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வரும் 12-ம் தேதி காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் விமான தளத்தற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வரும் 12-ம் தேதி காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீயை இன்று சந்தித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், ட்ரம்ப் உடனான பேச்சுவர்த்தைக்கு ஏற்பாடு செய்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

No comments