Header Ads

test

சு.க வின் 16 பேர் அணி கோத்தாவைச் சந்திக்கிறது

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி  வரும் புதன்கிழமை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புஞ்சிபொரளையில் உள்ள திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments