மல்லாகம் சூடு:காவல்துறை கைதாகவில்லை!
யாழ்.மல்லாகம் பகுதியில் தேவாலயத்தில் வைத்து இளைஞர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை உத்தியோத்தர்; கைது செய்யபட்டு உள்ளதாக வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அதிபர் ரொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எனினும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் இன்றிரவு வரை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இதனிடையே துப்பாக்கி சூட்டினில் உயிரிழந்த பாக்கியராஜா சுதர்சனின்(32வயது) உடலம் இன்றிரவு குடும்பத்தவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இரண்டு சகோதரிகளுடன் வாழ்ந்துவந்திருந்த அவர் ஒரு மேசன் தொழிலாளியென தெரியவருகின்றது.
இதனிடையே மல்லாகம் பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தில், இளைஞர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவ்விடத்தில் மோதல்களில் ஈடுபட்ட இரண்டு குழுக்களைச் சேர்ந்த ஐவரே, இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்டதாக உயிரிழந்தவரது நண்பர்கள் சிலரும் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment