பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பது போன்று உள்ளதாக சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் என, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இரண்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சுனில் பெரேரா ஆகியோரினால், உச்ச நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a Comment