Header Ads

test

கவுதமாலாவில் எரிமலைவெடிப்பு! 25 பேர் பலி!


எரிமைலை வெடித்ததில் கவுதமாலா நாட்டில் 24க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளர்.

மத்திய அமொிக்காவில் அமைந்துள்ள கவுதமாலா, ஃபுயீகோ என்ற எரிமலை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியுள்ளது. இவ்வெடிப்பில் பாறைகள் வெடித்துச் சிதறின. மற்றும் சாப்பல் துகள்களும் பரவின. இதனால் எரிமைலையை அண்டிய வாழும் விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு அனர்த்தம் ஏற்பட்டது.

இதில் பலர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் மீட்புப் பணிகளைத் தொடங்கியதாக கவுதமாலா தேசிய போிடர் மீட்புப் படை தகவல் வெளியிட்டுள்ளது. கவுதமாலா அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பினால் இன்று காலை வரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரழிவு தடுப்பு ஒருங்கிணைப்பாளர் கான்ரெட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவரும், அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொராலசும் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிபர் ஜிம்மி மொராலஸ், எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் ‘ரெட் அலார்ட்’ அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவர், நேற்று இரவு வெளிச்சம் குறைவாக இருந்ததால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், இன்று காலை மீட்பு பணி மீண்டும் துவங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது. 

No comments