இலங்கை

சிறிலங்காவின் பதில் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன பதவியேற்புசிறிலங்காவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர வெளிநாடு சென்றுள்ளார்.

இதனால் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment