Header Ads

test

காவல்துறை தாக்குதல்:இளைஞன் காயம்!

இலங்கை காவல்துறையின் நெல்லியடி காவல்நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து தாக்கப்பட்ட இளைஞன் ஒருவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரால் கோரப்பட்ட இலஞ்சத்தை கொடுக்க மறுத்த வாகனச் சாரதியே, தாக்குதலுக்குள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னணி பல்பொருள் விற்பனை நிறுவனமான சிங்கர் நிறுவன பணியாளரே தாக்கப்பட்டுள்ளார்.தனது விற்பனை நிலையத்தில் வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்த போதே அங்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் தர்க்கித்ததுடன் இலஞசம் கோரியுள்ளனர்.அதனை மறுதலிக்க முற்பட்டவேளை கண்மூடித்தனமாக தாக்கியதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே காவல்துறையினரின் தாக்குதல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்ட போது மல்லாகம் கொலை விவகாரத்தில் நேரமில்லாதிருப்பதாக யாழ்.அலுவலக இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments