அரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்கம் எழுதிய அரசியல் சிந்தனை நூல்வரிசை பத்து சிறு நூல்களின் வெளியீட்டு விழா நாளை மாலை 03 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அருட்தந்தை ம.சக்திவேல் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜாவும் நூல் பதிப்பீட்டுரையை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆகியோரும் கருத்துரையினை ஆசிரியர் வே.இந்திரச்செல்வனும் மலையக நாட்டார் பாடல்கள் குறித்து கதிரவேலு விமலநாதனும் உரை நிகழ்த்தவுள்ளனர்.
குறித்த 10 நூல்களில் ஒரு நூலினை அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும் இரு நூல்களினை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி. கணேசலிங்கமும் எழுதியுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a comment