இலங்கை

பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு


மாலபே தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் லஹிரு வீரசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் சைட்டம் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சைட்டம் மாணவர்கள் இந்த விடயம் குறித்து நியாயமான தீர்வொன்றை நோக்கி நகர முயற்சிக்க வேண்டும் எனவும் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment