Video Of Day

Breaking News

காணாமல் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு இன்று மாத்தறையில்


காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று இடம்பெற உள்ளதாக அந்த அலுவலகம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் காலை 09.30 மணி முதல் காணாமல் போனோர் அலுவலகத்தின் அலுவலர்கள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ளதாக அந்த அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறினார். அதேவேளை சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் கூறியுள்ளது.

No comments