இலங்கை

இலங்கையில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயாராகியுள்ள சீனா


இலங்கையில் தம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கான சீனாவின் தூதுவர் லூவோ சாஹோஹி இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீனாவின் ஜனாதிபதி க்சி ஜின்பின்னுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஆஃப்கானிஸ்தானில் இணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இணங்கிக் கொண்டனர்.

அதேபோன்று இலங்கையிலும் இந்தியாவுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சீனா தயாராகவே உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment