Header Ads

test

தலைமை இல்­லை­யேல் தனித்து என்­பது ஏற்­பு­டை­ய­தல்ல !!


முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் தினத்­தை­யொட்­டிய சர்ச்­சை­கள் ஓய்ந்­த­பா­டா­யில்லை. நினை­வேந்­த­லைத் தலை­மை­யேற்று நடத்­து­வ­தற்கு விட­வில்­லை­யா­யின் நாம் தனித்­துப் போய் ஒரு நிகழ்வை நடத்­து­வோம் என்ற ரீதி­யில் மாண­வர்­கள் புறப்­பட்­டி­ருப்­பது ஏற்­பு­டை­ய­து­மல்ல. ஒற்­றுமை குறித்­துப் பேசியே ஒற்­று­மை­யீ­னத்தை இன்­னும் விரி­வு­ப­டுத்­திப் பிளவை வலுப்­ப­டுத்­தும் வித­மாக இந்­தச் செயல் அமைந்­து­வி­டும் அபா­யம் இருப்­பதை மாண­வர்­கள் புரிந்­து­கொள்­ள­வேண்­டும். கடந்த 3 வரு­டங்­க­ளாக முள்­ளி­வாய்க்­கா­லில் நினை­வேந்­தல் நிகழ்வு நடந்து வரு­கின்­றது. முதன்­மை­யான பெரு­மெ­டுப்­பி­லான நிகழ்வு வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டி­லேயே நடந்­தது. அன்று மாண­வர்­கள் முள்­ளி­வாய்க்­கால் மண்­ணுக்­குச் செல்­வ­தற்­குக்­கூட அஞ்­சிக்­கொண்­டி­ருந்­தார்­கள் என்­ப­தைக் கவ­னத்­தில்­கொள்ள வேண்­டும். அந்­தத் தலை­மையை மாகாண சபை­யும் அர­சி­யல்­வா­தி­க­ளும் வழங்­கா­மல் இருந்­தி­ருந்­தால், முள்­ளி ­வாய்க்­கால் தமிழ்த் தேசிய மீள்­எ­ழுச்­சி­யின் புள்­ளி­யாகி இருக்­க­மு­டி­யாது . இன்று அதனை எங்­க­ளி­டம் தாருங்­கள் என்று மாண­வர்­கள் கேட்­ப­தற்­கு­ரிய வாய்ப்­புக்­கூட ஏற்­பட்­டி­ருக்­க­மாட்­டாது. அப்­ப­டிப்­பட்­ட­தொரு நிலை­யில் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் ஒன்­றி­ணைத்து ஒரே நிகழ்­வாக முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை ஏற்­பாடு செய்­வ­தற்கு மாண­வர்­கள் எடுத்த முயற்சி வர­வேற்­கத்­தக்­கது; பாராட்­டப்­ப­ட­வேண்­டி­யது. அந்த முயற்­சியை அவர்­கள் உண்­மை­யான விசு­வா­சத்­தோடு மேற்­கொண்­டி­ருந்­தார்­கள் என்­றால் எல்­லாத் தரப்­பி­ன­ரை­யும் ஒரே நிகழ்­வின் கீழ் ஒன்­றி­ணைக்­கும் தமது முயற்­சி­யில் அவர்­கள் மனந்­த­ள­ராது ஈடு­ப­ட­வேண்­டும். அத­னை­வி­டுத்து அதற்கு நாங்­கள்­தான் தலைமை தாங்­கு­வோம், அதற்கு விட­வில்­லை­யேல் தனித்­துச் செயற்­ப­டு­வோம், பிரச்­சி­னை­களை இன்­னும் வளர்த்­துச் செல்­வோம் என்ற வகை­யில் செயற்­ப­டு­வது முற்­றி­லும் தவ­றா­னது. அது தமிழ் மக்­க­ளால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டப்­போ­வ­து­மில்லை. முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு அர­சி­யல்­வா­தி­கள் தலை­மை­யேற்­ப­தற்­குத் தகு­தி­யற்­ற­வர்­கள் என்­கிற மாண­வர்­க­ளின் வாதம் உணர்ச்சி வெளிப்­பாட்­டின் வசப்­பட்­டது. தான் முன்­னெ­டுத்த அர­சி­யல் முன்­ந­கர்­வின் மூலம் தமிழ் இனம் எதிர்­கொண்ட பேர­வ­லத்­தில் இருந்து மீள்­வ­தற்­கும், அதன் அர­சி­யல் மீள் எ­ழுச்­சிக்­கும் அர­சி­யல்­வா­தி­கள் தலை­மை­தாங்­க­வில்லை எனில் ,வேறு எதற்கு அவர்­கள் தலைமை தாங்­கு­வது? அழி­வில் இருந்து, பின்­ன­டை­வில் இருந்து தமது இனத்தை மீட்டு வரும் பொறுப்பு அவர்­க­ளுக்கு இல்­லை­யெ­னில், அவர்­கள் மக்­கள் பிர­தி­நி­தி­க­ளாக இருப்­ப­தில் என்ன நியா­யம் இருக்க முடி­யும்? அத்­த­கைய ஒரு தலை­மைத்­து­வ­த்தில் குறை­பா­டு­கள் இருக்­க­லாம்; நேர்த்­தி­யின்மை இருக்­க­லாம்; மெத்­த­னப் போக்­குத் தெரி­ய­லாம். அவற்­றை­யெல்­லாம் நிவர்த்தி செய்­யத்­தக்க வகை­யில் அவர்­க­ளுக்கு அழுத்­தம் கொடுத்து அவர்­களை நேர்ப்­ப­டுத்­தித் தமது தலை­மையை அவர்­கள் சீர்ப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான பாதை­யைச் செப்­ப­னி­டும் பணியை மாண­வர்­கள் செய்­ய­மு­டி­யும். மாண­வர் சக்­தியை எவரும் குறைத்து எடை­போட்­டு­விட முடி­யாது. மாண­வர் சக்தி மாபெ­ரும் சக்தி என்­ப­தைக் கடந்த காலம் உணர்த்­தி­யி­ருப்­ப­தைப் போலவே, மாண­வர் சக்தி மட்­டுமே எல்­லா­வற்­றை­யும் வென்று தந்­து­வி­டப் போது­மா­ன­தல்ல என்­ப­தை­யும் வர­லாறு மிகத் தெளி­வாக உணர்த்­தி­விட்டே சென்­றி­ருக்­கின்­றது. எனவே தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் ஒற்­றுமை என்­ப­து, எப்­போ­தை­யும்­விட அதி­கம் தேவைப்­ப­டும் இன்­றைய நிலை­யில், அத்­த­கைய ஒரு நிலை நோக்கி அர­சி­யல் கட்­சி­க­ளைச் சாய்த்­துச் செல்­லும் நகர்­வு­க­ளுக்கு தலைமை தாங்­கு­ப­வர்­க­ளாக மாண­வர்­கள் மாற­வேண்­டும். அதை­வி­டுத்து, நிகழ்­வு­க­ளுக்­குத் தலைமை தாங்க அவர்­கள் விரும்­பு­வது சற்று அவ­ச­ரப்­ப­டும் போக்­கா­கவே தெரி­கின்­றது. எனவே இன்று கலந்­து­ரை­யா­டலை நடத்­தும் மாண­வர்­கள், நன்கு ஆராய்ந்து, பன்­மு­கப் பார்­வை­யு­டன், எதிர்­கால அர­சி­யல் நோக்­கிய தீர்க்க தரி­ச­னத்­து­டன் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் குறித்து முடி­வெ­டுக்­க­வேண்­டும். கட்சி அர­சி­ய­லின் இடையே மாட்­டிக்­கொள்­ளா­மல், வர­லாறு தமக்­காக விட்டு வைத்­தி­ருக்­கும் இடத்தை நிரப்­பு­வ­தற்கு அவர்­கள் திட­மா­க­வும் புத்­தி­சா­துர்­யத்­து­ ட­னும் செயற்­ப­ட­வேண்­டும். அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் ஓர­ணி­யில் இணைத்து பேரெ­ழுச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­து­தான் மாண­வர்­க­ளின் நோக்­கம் என்­றால், அதி­லி­ருந்து அவர்­கள் ஒரு­போ­தும் வில­க­வேண்­டி­ய­தில்லை. தமது இலக்கை மாண­வர்­கள் அடை­வ­தற்கு ஒரே இடத்­தில் வைத்து மட்­டுமே செய்­ய­வேண்­டும் என்­கிற அவ­சி­யம் இல்லை. பேரெ­ழுச்­சியை உண்­டாக்­கிய மாவீ­ரர் தினங்­கள் ஒரே­யி­டத்­தில் நடந்­தே­றி­ய­வை­யில்லை. ஆனால் ஒரே பாணி­யில் ஒரே நேரத்­தில் எல்லா இடங்­க­ளி­லும் நடந்­தே­றின. மனம் இருந்­தால் மார்க்­கங்­கள் நிறை­யவே உள்ளன.

No comments