Header Ads

test

முன்னணியும் போராட்டத்திற்கு அழைப்பு!


ஜனநாயக வழியிலான போராட்டத்தை துப்பாக்கி முனையில் நசுக்கும் நோக்கில் தமிழகத்தின் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் தாக்குதல்களிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் போராட்டமும், கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வும் எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளதாக முன்னணி அறிவிப்பு விடுத்துள்ளது.
மட்டக்களப்பு காலை 10 மணிக்கு காந்திபூங்காவிலும் யாழ்ப்பாணத்தில் மாலை 3 மணிக்கு மத்திய பேரூந்து நிலையம் முன்னதாகவும் கண்டனப்போராட்டம் மற்றும் அஞ்சில நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

No comments