போத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் – சிங்கள நாளிதழ் ஆசிரியருக்கு அழைப்பாணை
ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக, வருமாறு நாளிதழ் ஒன்றின் ஆசிரியருக்கு குற்றப் புலனாய்வுப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கள நாளிதழ் ஒன்றின் ஆசிரியரையே இன்று வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த தாக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் 2010ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
கடந்த ஆண்டு நாடு திரும்பிய போத்தல ஜெயந்த, தாம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவிடம், கோரியிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, நடத்தப்படும் விசாரணைகள் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் போத்தல ஜெயந்த சந்தேகம் தெரிவித்திருந்தார்.
Post a Comment