இலங்கை

ஹெலிகொப்டரில் பயணிக்கும் போதும் நான் தான் ஜனாதிபதி- மஹிந்த விளக்கம்


நான் ஜனாதிபதியாக இருக்கும் போதே ஹெலிகொப்டரில் பயணித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அனுமதியின்றி ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி பயணித்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த எம்.பி. இவ்வாறு கூறினார். நான் ஜனாதிபதியாக பதவி வகித்துக்கொண்டிருந்த போதே கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பயணித்தேன்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னரே நான் கொழும்பிலிருந்து பயணித்தேன். புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையில் நான் தான் அப்பதவியில் இருந்தேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 தனது இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment