Video Of Day

Breaking News

தொடரும் சுற்றிவளைப்புக்கள்


தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்தியை தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக மத்திய சுற்றுச் சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தரமற்ற பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ப்ளாஸ்டிக் மூலப்பொருட்களை கொண்டு உணவுப் பொதியிடும் பெட்டிகள் உற்பத்தி செய்த நிறுவனம் ஒன்று சுற்றுச் சூழல் அதிகார சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தடை செய்யப்பட்ட எச்.டீ.பீ,ஈ ப்ளாஸ்டிக்கை பயன்படுத்தி, உணவு பொதியிடும் பெட்டிகளை குறித்த நிறுவனம் உற்பத்தி செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உற்பத்திகளின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன், நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மத்திய சுற்றுச் சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது

No comments