இலங்கையை சேர்ந்த ஜோன் பீரிஸ் என்பவர் நேபாளிய நேரத்தின் பிரகாரம் இன்று
(22-05-2018) காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் இவர் என்பதுவும் குறிப்பிடதக்கது.