இலங்கை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் – சபாநாயகர் கரு ஜெயசூரியவிடமும் வாக்குமூலம்


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில், விரைவில் சபாநாயகரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சராக இருந்த கரு ஜெயசூரிய, கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு தகவல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment