Header Ads

test

பன்றிக் காய்ச்சல்! இரு குழந்தைகள் மரணம்!

இன்புளுவென்சா வைரஸ் (பன்றிக்காய்ச்சல்) காய்ச்சலினால் கடந்த இரு தினங்களில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (26) காலையும் நேற்று முன்தினம் இரவும் இந்த மரணங்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு மாதங்கள் மற்றும் ஒன்றரை வயது ஆகிய இரு குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வைரஸ் காரணமாக இதுவரை 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments