ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?
யாழ்.மாநகர சபைக்கான வேட்பாளராக போட்டியிட யோகேஸ்வரி பற்குணராசா முன்னர் விருப்பம் கொண்டிராத நிலையில் பின்னர் பட்டியல் மூலம் உள்ளே புகுந்திருந்தார்.
இந்நிலையில் சபையின் மாண்பைப் பேணும் வகையில் யோகேஸ்வரி பற்குணராசா செயற்படுவதில்லையென யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், கூற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.மாநகர சபையின் இரண்டாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை சபை மண்டபத்தில் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் நடைபெற்றிருந்தது. இதன்போது, கடந்த அமர்வின் கூட்ட அறிக்கையில்; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என முன்னாள் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தனது கருத்தை தனது இருக்கையில் அமர்ந்தவாறு தெரிவித்தார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு சிலை வைப்பதில் கூட ஈபிடிபிக்கு ஆட்சேபனையில்லையென தெரிவித்த அவர் எழுந்து நின்று சபையில் வாதிடவேண்டியதில்லையெனவும் வாதிட்டிருந்தார்.
இதன் போது சபை மாண்பை பேண முதல்வர் கட்டளையிட்டிருந்தார்.
இது தொடர்பில் வெளியே வந்திருந்த யோகேஸ்வரியிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்த போதும் ஆனோல்ட் பெரிய கொம்பல்ல என தெரிவித்துள்ளார்.
Post a Comment