Header Ads

test

உயிரிழந்த தமிழ்ப் பெண்! முச்சக்கர வண்டி ஓட்டுனர் கைது!

களுத்துறை – மத்துகமை ஹோர்கன் தோட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜா ஜெயகலா என்ற தமிழ் பெண்ணின் மர்ம மரணம் தொடர்பில் ஆர்.ஏ.சிறிபால என்ற முச்சக்கரவண்டி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட குறித்த நபரை இன்று களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய மத்துகமை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளை தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் பணிப்புரையின்படி, மேல்மாகாண தெற்கு வலய பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் கண்காணிப்பில் மத்துகமை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஜி.ஏ.எஸ்.என்.சேனாரத்ன முன்னெடுகின்றார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஹோர்கன் தோட்டத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் கோவிந்தராஜா ஜெயகலா பணி முடிந்து முச்சக்கரவண்டியில் வீடு திரும்பும் போது முச்சக்கர வண்டியில் இருந்த வெளியில் பாய்ந்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த ஜெயகலாவை, முச்சக்கர வண்டி ஓட்டுனரான ஆர்.ஏ. சிறிபால தானே வைத்தியசாலையில் சேர்ப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

எனினும் வைத்தியசாலையில் சேர்க்காமல் இடை நடுவில் அவரை தூக்கி எறிந்துவிட்டு போயுள்ளார்.
பின்னர் ஊரவர்களின் உதவியால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஜெயகலா அதிக குருதி வெளியேற்றத்தால் மரணமடைந்துள்ளார்.

வைத்தியசாலையில் சேர்ப்பதாக கூறி எடுத்து சென்ற, முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஆர்.ஏ. சிறிபால அவரை வைத்தியசாலையில் சேர்க்காமல் இடை நடுவில் கைவிட்டு சென்றமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தின இரவு இது பற்றிய தகவலை ஜனநாயக மக்கள் முன்னணியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியசாமி அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
அமைச்சரின் பணிப்புரையை அடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார், வெசாக் விடுமுறை காரணமாக சிறிது தாமதமானாலும் கூட, தற்சமயம் தொடர் விசாரணையின் பின் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

ஆர்.ஏ. சிறிபால என்ற இந்த நபர், கொழும்பில் பெருந்தெருக்கள் அதிகார சபையில் பணியாற்றுபவர். விடுமுறை காலங்களில் சொந்த ஊரில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர்.

இவரது வண்டி தொடர்பான விபரங்கள் அப்பகுதியில் அமைந்திருந்த வீதி கமராவில் முழுமையாக பதிவாகி இல்லாவிட்டாலும் கூட, பொலிஸ் விசாரனையில் விபரங்கள் வெளி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments