இலங்கை

மகிந்த, கோட்டபாய இறுதி யுத்தத்தில் என்ன செய்தார்கள்? சரத் பொன்சேகா விளக்கம்

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு சபை உறுப்பினர்களை தூங்க வைத்ததைத் தவிர் வேறு எதனையும் செய்யவில்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

யுத்தத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு இந்த நாட்டிலுள்ள சகல ஜனாதிபதிகளும் கூறியதாகவும், அது இரண்டு வசனங்கள் மட்டுமே எனவும் இதேபோன்ற ஒன்றைத்தான் மஹிந்த ராஜபக்ஷவும் செய்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் தன்னுடன் ஹெலிகொப்டரில் ஏறி இரு முறை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தது மட்டுமே இறுதி யுத்தத்துக்கான ஆற்றிய பங்களிப்பு எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment